ஹோம் /நியூஸ் /வணிகம் /

விரைவில் டிஜிட்டல் கரன்சி... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

விரைவில் டிஜிட்டல் கரன்சி... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிஜிட்டல் கரண்சி

டிஜிட்டல் கரண்சி

CBDC இல் ஆஃப்லைன் அம்சத்தைப் பயன்படுத்துவது தொலைதூர மின்சாரம் அல்லது இணையமற்ற இடங்களிலும் பயனளிக்கும், மீள்தன்மை நன்மைகளை வழங்கும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வெளியிடுவது பற்றிய செய்தி குறிப்பை வெளியிட்டது. CBDC கள் மற்றும் குறிப்பாக டிஜிட்டல் ரூபாயின் அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

அதோடு டிஜிட்டல் நாணயங்களை சோதனை முறையாக குறிப்பிட்ட சில பயன்பாட்டு சந்தர்ப்பங்களில் மின்-ரூபாயை விரைவில் தொடங்கவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் நாணயங்கள்:

நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (code ) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது. இவற்றை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும்.

தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!

இந்தியாவில் ….

இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று கூறினார். அதன்படி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் CBDC என்பது ஒரு டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் அல்லது அதிகார்வ பூர்வமான பண வடிவமாகும்.

அதன் அடிப்படையில் அதற்கான முதற்கட்ட பணியை மத்திய வங்கி தொடங்கியுள்ளது. மக்களுக்கும் வங்கிகளுக்கும் டிஜிட்டல் நாணயங்களின் பயன்பாடு, பிரச்சனைகள், தீர்வுகள், நன்மைகள் ஆகியவற்றை விளக்க “கான்செப்ட் நோட்” என்பதை வெளியிட்டுள்ளது.

இதில், "CBDC, ஒரு இறையாண்மை நாணயமாக இருப்பதால், மத்திய வங்கி பணத்தின் தனித்துவமான நன்மைகள் பாதுகாப்பு, பணப்புழக்கம், தீர்வு மற்றும் ஒருமைப்பாடு உள்ளன. இந்தியாவில் CBDC வெளியீட்டை ஆராய்வதற்கான முக்கிய உந்துதல்கள்,  பண நிர்வாகத்தில் ஈடுபடும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல், நிதிச் சேர்க்கையை ஊக்குவித்தல், பின்னடைவு, செயல்திறன் மற்றும் கட்டண முறைமையில் புதுமை, தீர்வு முறைக்கு செயல்திறனைச் சேர்த்தல், குறுக்கு வழியில் புதுமைகளை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.

டைம்ஸ் இதழின் உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி!

பணம் செலுத்தும் முறைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் எந்தவொரு தனியார் மெய்நிகர் கரன்சிகளும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் இல்லாமல் வழங்கக்கூடிய பயன்பாடுகளை பொதுமக்களுக்கு வழங்குகின்றன" என்று ரிசர்வ் வங்கி கூறியது.

அதோடு CBDC இல் ஆஃப்லைன் அம்சத்தைப் பயன்படுத்துவது தொலைதூர மின்சாரம் அல்லது இணையமற்ற இடங்களிலும் பயனளிக்கும், மீள்தன்மை நன்மைகளை வழங்கும் என்றும் கூறியது.

டிஜிட்டல் நாணயங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புத் தேர்வுகள், டிஜிட்டல் ரூபாயின் சாத்தியமான பயன்பாடுகள், வெளியீட்டு வழிமுறைகள் போன்ற முக்கிய விஷயங்களை இந்த செய்தி குறிப்பில் விவாதிக்கிறது. இது வங்கி அமைப்பு, பணவியல் கொள்கை, நிதி நிலைத்தன்மை, மற்றும் தனியுரிமை சிக்கல்களை பகுப்பாய்வு செய்கிறது. மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கை மற்றும் பயன்பாட்டு நெறிகளையும் பழக்கப்படுத்த முயல்கிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Digital Currency, Minister Nirmala Seetharaman, RBI, Rupee