Home /News /business /

இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

பெருந்தொற்று காலத்தில் இந்தியா சுமார் 52 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அதை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

    கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா சந்தித்த இழப்பு, அதன் தாக்கங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா சந்தித்த இழப்பானது ரூ.52 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த இழப்பை சரிசெய்து ஈடுகட்ட இந்தியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியா பெரும் வீழ்ச்சியை கண்ட நிலையில், முதல் அலை தணிந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மீட்சி கண்டது. ஆனால், மீண்டும் 2021 ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் அலை ஏற்பட்டதால் இந்த முன்னேற்றம் மீண்டும் தடைப்பட்டது.

    அதன் பின்னர் சில மாதங்களில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த அதேவேளையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் அலை பாதிப்பு தடை போட்டது. இது போன்ற அடுத்தடுத்த கோவிட் அலைகளால் இந்திய பொருளாதாரம் சுமார் 52 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பை சந்தித்தது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் மோதல் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விலைவாசி உயர்வு மற்றும் உலக விநியோக சங்கிலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இதுபோன்ற தாக்கங்களால், 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் இந்திய பொருளாதாரம் முறையே, ரூ.19.1 லட்சம் கோடி, ரூ.17.1 லட்சம் கோடி, ரூ.16.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலைமை சீரடைந்து இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை தொடர்ந்து கண்டால் 2034-35 காலகட்டத்தில் இழப்பை ஈடுகட்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

    இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழில் திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சித்துறையில் முதலீடு செய்தல், கல்வி மற்றும் சுகாதரத்தில் அதிக நிதிகளை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Indian economy, RBI data

    அடுத்த செய்தி