ரெப்போ வட்டி குறைப்பு: வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி குறைப்பு:  வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
ஆர்.பி.ஐ. அலுவலகம்
  • Share this:
வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை தொடர்ந்து 5-வது முறையாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், நிதிக் கொள்கையை 6 உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு வெளியிட்டுள்ளது.

இதில், ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் தொடர்ந்து 5-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எனினும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டிவிகிதம், தொடர்ந்து 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக ரிசர்வ் வங்கியின் குழு குறைத்துள்ளது.

Watch Also:
First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்