• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • குறைந்த ரெப்போ விகிதம்... வீட்டுக்கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு

குறைந்த ரெப்போ விகிதம்... வீட்டுக்கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

  • Share this:
    ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளதால் வீட்டுக்கடன்களுக்கான வட்டி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மக்களிடம் பணப்புழக்கம் குறையும் சூழலில் அல்லது இக்கட்டான பொருளாதார சூழல் நிலவும் போது ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

    5.15 சதவிகிதமாக இருந்த ரெப்போ விகிதம் தற்போது 75 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.40 சதவிகிதம் ஆக உள்ளது. ரெப்போ விகிதம் குறைக்கப்படும் போது அதனால் பெரிய பலனை வங்கிகள் பெறுகின்றன. இந்த நிலையில் தாங்கள் பெற்றப் பயனை வாடிக்கையாளர்களுக்கும் பிரித்து வழங்குவதற்காக வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பர்.

    இதனாலே தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாகனக் கடன், தனிநபர்க் கடன் வட்டி விகிதங்களும் குறையலாம்.

    மேலும் பார்க்க: அடுத்த 3 மாதங்களுக்கான PF பணத்தை உங்களுக்காக அரசே செலுத்தும்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: