ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறைகளில் ஒன்றான ஐ.எம்.பி.எஸ். மூலம் நாளோன்றுக்கு ரூ.5 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதியளித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் நேர விரயத்தையும், அலைச்சலையும் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை வங்கிகளில் ஊக்குவித்து வருகின்றன. நெப்ட்,(NIFT), ஐ.எம்.பி.எஸ்(IMPS), ஆர்.டி.ஜி.எஸ்(RTGS) ஆகிய முறைகளில் ஆன்லைன் வழியாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
இதில், ஐ.எம்.பி.எஸ். முறை மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப முடியும். இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (என்பிசிஐ) இந்த சேவையை நிர்வகித்து வருகிறது. வங்கி விடுமுறை நாட்களிலும் கூட ஐ.எம்.பி.எஸ் முறையில் பணம் அனுப்ப முடியும். இதற்கான உச்ச வரம்பாக நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் இருந்தது.
இந்த உச்ச வரம்பு தனிநபர் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்றதாக இருந்தபோதிலும் ரூ.2 லட்சம் என்னும் உச்ச வரம்பு வர்த்தகம் சார்ந்த பணப் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் குறைவாக இருப்பதாக வணிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் 7 லட்சம் சம்பாதிக்கலாம்.. இப்படி பிளான் பண்ணி செஞ்சா போதும்!
இந்நிலையில், ஐஎம்பிஎஸ் தினசரி பணப்பரிமாற்ற வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பயன்பாடு அதிகரிக்கும் என்று ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளாா்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.