ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு... வீடு, வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு....!

ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள அதே நேரம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு... வீடு, வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு....!
ஆர்பிஐ
  • News18
  • Last Updated: June 6, 2019, 2:21 PM IST
  • Share this:
2019-2020 நிதியாண்டின் இரண்டாம் நாணய கொள்கை கூட்ட அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.

மும்பையில் ஜூன் 4-ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான நாணய கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து 5.75 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வாடிக்கையாளர்களின் மீதான கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது.


இதனால், இ.எம்.ஐ எனப்படும் மாதத் தவணைகளும் குறையலாம்.

ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து, வங்கி நிறுவனங்கள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, மிதவை வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையும்.மறுபக்கம் ஃபிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகித லாபமும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள அதே நேரம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளிடமிருந்து ஆர்பிஐ வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆர்பிஐ 0.50 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து மட்டுமல்லாமல், 2019-2020 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி-ஐ 7.2 சதவீத இலக்கிலிருந்து 7 சதவீதமாகவும் ஆர்பிஐ குறைத்து கணித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: June 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading