ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ஆர்பிஐ... வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.

news18
Updated: February 7, 2019, 12:36 PM IST
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ஆர்பிஐ... வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!
ரிசர்வ் வங்கி முத்திரை
news18
Updated: February 7, 2019, 12:36 PM IST
ஆர்பிஐ 6வது நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.


2017 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 2019 பிப்ரவரி மாதம் குறைத்துள்ளது.

ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பிற்குப் பிறகும் பங்குச்சந்தை ஏற்றத்துடனே வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 12 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 110.80 புள்ளிகள் உயர்ந்து 37,086.03 ரூபாயாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 30.45 சதவீதம் உயர்ந்து 11,092.90 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிபந்தனையில்லா கடன் அளவை 60,000 ரூபாயிலிருந்து 1.60 லட்சம் ரூபாயாக ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.

Loading...

அக்டோபர் முதல் டிசபர் 2018 வரை சில்லறை பணவீக்கம் 3.9 சதவீதமாக இருந்தது. இதுவே ஜனவரி - மார்ச் காலாண்டில் சில்லறை பணவீக்கம் 2.8 சதவீதமாகவும், ஏப்ரல் முதல் 2019 வரையில் 3.4 சதவீதமாக இருக்கும் என்றும் ஆர்பிஐ எதிர்பார்க்கிறது.

ரெப்போ வட்டி விகித குறைப்பிற்கு 4 நபர்கள் ஆதரவாகவும், 2 நபர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ரெப்போ வட்டி விகிதம் குறைப்புக்கு எதிராக வாக்களித்ததில் ஆர்பிஐ துணை கவர்னரான விரல் ஆச்சார்யாவும் ஒருவர் ஆவார்.

இறக்குமதி வளர்ச்சி டிசம்பர் மாதம் குறைந்துள்ளது.

ஆர்பிஐ-ன் அடுத்த நாணய கொள்கை கூட்டம் 2019 ஏப்ரல் மாதம் 2 முதல் 4 தேதி வரையில் நடைபெறும்.

 
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...