ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திஸ்கந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவு இந்த வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் வரி விகிதம் உயர்வு காரணமாக வங்கிகளிடம் சாமானியர்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும்.
ரிசர்வ் வங்கி(reserve bank of india) பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் (repo rate) எனப்படுகிறது. இதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி ரிவர்ஸ் ரெப்போ (reverse repo) எனப்படுகிறது. நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மாதம் 4ம் தேதி ரெப்போ ரேட்டை 0.40 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனால் ரெப்போ ரேட் விகிதம் 4.40 சதவீதமாக இருந்து வந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் ரெப்போ ரேட் விகிதத்தை மேலும் 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பின்போது சக்திஸ்கந்த தாஸ் தெரிவித்தார். இதனால், ரெப்போ ரேட் விகிதம் 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 4.65% இலிருந்து 5.15% ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!
2022-23 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி என்பது 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பணவிக்கம் என்பது 6.7 சதவீதமாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது எனவும் சக்திஸ்கந்த தாஸ் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.