கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் இயல்பாக செய்யக்கூடிய நடவடிக்கையாக உள்ளது. எளிய டீக் கடை தொடங்கி தங்க நகை வாங்குவது வரை அனைத்து பண பரிவர்த்தணைகளையும் ஆன்லைன் டிஜிட்டல் பேமன்ட் வசதிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம், பிம் யூபிஐ போன்ற பல்வேறு வழிகளில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது. மின்னணு நிதி பரிமாற்றத்திற்கான உள்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்கும் நோக்கில் கட்டணம் விதிக்கப்பட உள்ளது எனவும், இதுதொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உங்கள் வீட்டு கடன் சுமையை குறைக்க, கடனை முன் கூட்டியே முடிக்க உதவும் 4 வழிகள்.!
பணமதிப்பு இழப்பிற்கு பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இப்படி இருக்க மக்கள் எளிமையாக பயன்படுத்தும் இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital Transaction, RBI