ஆர்பிஐ நாணயக் கொள்கை கூட்டம்: ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

6 வது நாணய கொள்கை கூட்டம் ஃபிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் 7-ம் தேதி வெளியிடப்படும்.

news18
Updated: February 6, 2019, 11:52 AM IST
ஆர்பிஐ நாணயக் கொள்கை கூட்டம்: ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?
ரிசர்வ் வங்கி முத்திரை
news18
Updated: February 6, 2019, 11:52 AM IST
பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்ட (RBI Monetary Policy) அறிவிப்பில் 0.50 முதல் 0.25 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியால் வணிக வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக் கூடிய வட்டி விகிதம் ஆகும். மக்களுக்குப் பணம் தேவைப்படும் போது வங்கிகளிடம் கடன் பெறுவது போன்று , வங்கிகளுக்குக் கடன் தேவைப்படும் போது மத்திய வங்கியை அணுகுவார்கள்.

அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கிக்குக் கடன் தேவைப்பட்டாலும் சில வணிக வங்கிகள் கடன் அளிக்கும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும்.

6வது நாணய கொள்கை கூட்டம் ஃபிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் 7-ம் தேதி வெளியிடப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உள்ளது.

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைந்தால் விட்டு கடன் போன்ற திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவி ஏற்றபிறகு நடைபெறும் முதல் நாணய கொள்கை கூட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்புப் புதன்கிழமை பிறபகல் 2:30 நடைபெற்று வந்தது. ஆனால் 6வது நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமை (2019 ஃபிப்ரவரி 7-ம் தேதி) காலை 11:45 மணியளவில் செய்யப்பட உள்ளது.
First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...