• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • RBI Repo வட்டி விகிதம் அறிவிப்பு.. கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

RBI Repo வட்டி விகிதம் அறிவிப்பு.. கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

ஆர்.பி.ஐ. ஆளுநர்
உர்ஜித் படேல்.

ஆர்.பி.ஐ. ஆளுநர் உர்ஜித் படேல்.

ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரொக்க பணம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் 6.5 சதவீதம் மற்றும் 4 சதவீதமாகவே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய ரிசர்வ் வங்கி இன்று 5-வது நாணய கொள்கை கூட்ட அறிவிப்பினை பிற்பகல் 2:30 மணிக்கு வெளியிட இருக்கிறது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரொக்க பணம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் 6.5 சதவீதம் மற்றும் 4 சதவீதமாகவே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி. ரொக்க பணம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியின் நடப்புக் கணக்கில் வங்கிகள் வைத்துள்ள டெபாசிட்டுக்கான வட்டி விகிதம். இதுவே ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்றால் வங்கிகள் மத்திய வங்கியிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம்.

    ஆறு நபர்கள் தலைமையிலான நாணய கொள்கை கூட்டத்தினை ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமை தாங்கி நடுத்துவார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம் டிசம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்று பிற்பகல் 2:30 மணிக்கு அறிவிப்பினை வெளியிடுவார்கள்.

    ரெப்போ வட்டி விகிதம்

    பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவது, ரூபாய் மதிப்பினை நிர்வகிப்பது, குறைந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் வேகம் குறைந்த ஜிடிபி வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பினை எதிர்பார்க்கலாம்.

    நாணய கொள்கை கூட்டத்தின் நிலை


    தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து வந்த நிலையில் அதனை இந்த முறை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தவல்கள் வருகின்றன. வல்லுநர்களும் இந்த முறை வட்டி விகித உயர்வு இருக்காது என்றே கணித்துள்ளனர்.

    மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ


    மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இடையிலான மோதல் அண்மையில் முடிவுக்கு வந்த நிலையில் இந்தக் கூட்டத்தின் அறிவிப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் அந்த மோதல் குறித்தும் ஆர்பிஐ கவர்னர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய வங்கி சிறு மற்றும் குறு நிறுவன கடன் திட்டங்களை 25 கோடி ரூபாய் வரை மறு கட்டமைப்புச் செய்ய ஒப்புக்கொண்டது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.

    பணப்புழக்கம்


    தற்போது பணப்புழக்கத்தில் உள்ள நெருக்கடியான சூழலினை தவிர்க்க கூடிய அறிவிப்புகள், உபரி தொகை அளிப்பது குறித்த அறிவிப்புகளையும் இன்றை நாணய கொள்கை கூட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Veeramani Panneerselvam
    First published: