ரிசர்வ் வங்கி உத்தரவால் வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி விகிதம் குறைகிறது!

ரிசர்வ் வங்கி உத்தரவால் வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி விகிதம் குறைகிறது!
ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: September 5, 2019, 7:03 AM IST
  • Share this:
குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்திற்கு ஏற்றதுபோல, வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ என அழைக்கப்படுகிறது. பொதுவாக 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். அதன் பயனைப் பெறும் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தையும் மாற்றும்.

அதன்படி, ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால் வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். கடந்த பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி 7 முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.


அதன்படி 6.50 சதவிகிதத்தில் இருந்து 5.40 சதவிகிதமாக ரெப்போ வட்டி படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் பல வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்கவில்லை. இது தொடர்பான புகார்கள் வந்த நிலையில் இந்த நிலையை தவிர்க்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் ரெப்போ வட்டி விகிதத்துடன் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இணைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதனால் வீடு, வாகனம், தனி நபர் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதம், அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும்.

First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading