முதல் நாணய கொள்கை அறிவிப்பை வெளியிடும் ஆர்பிஐ: வட்டி விகிதம் குறையுமா?

நுகர்வோர் பணவீக்கம் ஆர்பிஐ இலக்கான 4 சதவீதத்திற்கும் உள்ளாகவே உள்ளது.

முதல் நாணய கொள்கை அறிவிப்பை வெளியிடும் ஆர்பிஐ: வட்டி விகிதம் குறையுமா?
ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: April 4, 2019, 11:33 AM IST
  • Share this:
ஆர்பிஐ இன்று வெளியிட உள்ள நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆர்பிஐ நாணய கொள்கைக் கூட்டம் நடைபெறும். அதில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு இன்று காலை 11:45 மணியளவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிடுவார்.

நுகர்வோர் பணவீக்கம், ஆர்பிஐ இலக்கான 4 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. பிப்ரவரி மாதம் பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது.


இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மக்கள் அதிகம் செலவு செய்யும் போது பணவீக்கம் குறையும். ஜிடிபி உயரும் என்ற காரணத்தினால் இன்று 0.50 சதவீதம் வரை கூட ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைந்தால் ஈஎம்ஐ செலவு குறையும். ஈஎம்ஐ செலவு குறைந்தால் மக்கள் அதிகம் செலவு செய்வார்கள்.

மறுபக்கம் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் ஃபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதமும் குறையும். இதனால் புதியதாக ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பவர்களுக்கு லாபம் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது ஆர்பிஐ வங்கிகளிடமிருந்து பெறும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம்.

இன்று நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு என்பதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 60.2 புள்ளிகள் சரிந்து 38,817.10 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 18.65 புள்ளிகள் சரிந்து 11,625.30. புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க:

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading