ஹோம் /நியூஸ் /வணிகம் /

இன்டர்நெட் இல்லாமல் இனி பணம் அனுப்பலாம்... Feature ஃபோன்களுக்கான UPI சேவைகள் அறிமுகம்..

இன்டர்நெட் இல்லாமல் இனி பணம் அனுப்பலாம்... Feature ஃபோன்களுக்கான UPI சேவைகள் அறிமுகம்..

ஃபீச்சர் ஃபோன்களுக்கான யூபிஐ சேவைகள் அறிமுகம்

ஃபீச்சர் ஃபோன்களுக்கான யூபிஐ சேவைகள் அறிமுகம்

UPI Payments | 4 விதமான மாற்று தொழில்நுட்பங்கள் வாயிலாக, ஃபீச்சர் ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் இப்போது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர் என்றால், 100-க்கு 100 சதவீதம் அதில் இன்டர்நெட் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். இன்டர்நெட் பேங்கிங், UPI பேமெண்ட் வசதியை அடிப்படையாகக் கொண்ட ஜி-பே, போன்-பே, பேடிஎம் போன்ற சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். சுருக்கமாகச் சொன்னால், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

ஆனால், ஸ்மோர்ட்ஃபோன் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத மக்கள், இந்த டிஜிட்டல் வரையறைக்குள் வருவதில்லை. அத்தகைய மக்களும் யூபிஐ சேவையைப் பயன்படுத்தும் வகையில், ‘UPI 123PAY’ என்ற சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை இன்டர்நெட் வசதி இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்த புதிய வசதியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோவை டிவிட்டரில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநர் பேசுகையில், ‘யூபிஐ 123PAY’ வசதியை அறிமுகம் செய்வது என்பது, இதுவரையிலும் டிஜிட்டல் பேமெண்ட் வசதி கிடைக்காத மக்களுக்கு பலன் அளிப்பதாக இருக்கும். நமது பொருளாதாரத்தில் மிகப் பெரும் அளவுக்கு நிதி சுழற்சியை ஏற்படுத்த இது உதவிகரமாக இருக்கும்’’ என்று கூறினார்.

அதில், டிவிட்டர் பதிவாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “யூபிஐ சேவையில் நாளொன்றுக்கு ஒரு அக்கவுண்ட்டில் இருந்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அனுப்பி வைக்கவும், அதிகபட்சம் 10 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் இதை அப்படியே இரட்டிப்பாக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

யூபிஐ 123PAY மூலமாக பணம் அனுப்புவது எப்படி

4 விதமான மாற்று தொழில்நுட்பங்கள் வாயிலாக, ஃபீச்சர் ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் இப்போது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இதற்கு நீங்கள் ஒரு ஐவிஆர் சேவை எண்-ஐ தொடர்பு கொள்ள வேண்டும், உங்கள் ஃபீச்சர் ஃபோனில் ஆப் பங்கஷனாலிட்டி இருக்க வேண்டு மற்றும் மிஸ்டு கால் அப்ரோச் பின்பற்ற வேண்டும். நான்காவதாக, சவுண்ட்-பேஸ்டு பேமெண்ட்களை மேற்கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் பரிவர்த்தனை செய்ய முடியும்

மற்ற யூபிஐ பயனாளர்களைப் போலவே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் பணம் அனுப்பிக் கொள்ளலாம். வாகனங்களுக்கான ஃபாஸ்ட் டேக் கட்டணம் செலுத்துவது, மொபைல் பில்களுக்கு பணம் செலுத்துவது, அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்து தெரிந்து கொள்வது ஆகிய சேவைகளை பெற முடியும். வாடிக்கையாளர்கள் பெயரை சேர்த்து, அவர்களது பேங்க் அக்கவுண்ட் லிங்க் செய்யவும், யூபிஐ பின் நம்பர் மாற்றவும் முடியும்.

இதுகுறித்த குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: RBI, UPI