Home /News /business /

தமிழகம், மத்திய பிரதேசத்தில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி!

தமிழகம், மத்திய பிரதேசத்தில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி!

விவசாயி கடன் அட்டை

விவசாயி கடன் அட்டை

வங்கிகளுக்குள் உள்ள பல்வேறு செயல்முறைகளை தன்னியக்கமாக்குவது(automation) மற்றும் சேவை வழங்குநர்களுடன் அவற்றின் அமைப்புகளை ஒருங்கிணைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் விவசாயி கடன் அட்டையை (KCC) டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோட்டத்தைத் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக இந்த இரண்டு மாநிலங்களின் குறுப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் முன்னோட்டங்களை செய்ய உள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில், அதை மற்ற மாவட்டங்களுக்கும், பிறகு  படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விவசாயி கடன் அட்டை திட்டம்:
1998 ஆம் ஆண்டு விவசாயிகள் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களை உடனடியாக வாங்குவதற்கு, வங்கிகள் ஒரே மாதிரியான கோட்பாடுகளோடு விவசாயக் கடன் வழங்குவதற்காக KCC திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் விவசாயம் தொடர்புடைய பண்ணை அல்லாத மற்ற சிறுதொழில்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

உயிர்களை குடிக்கும் ஒளி விளக்குகள்..! - ஒளி மாசுபாடு குறித்த ஆய்வில் தகவல்

அதன்பிறகு, 2020 டிசம்பரில், விவசாயிகளுக்கு அவர்களின் சாகுபடி மற்றும் பிற தேவைகளுக்கு ஒரே சாளரத்தின் கீழ் வங்கி முறையிலிருந்து போதுமான மற்றும் சரியான நேரத்தில் கடன் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன், கிசான் கிரெடிட் கார்டுக்கு (கேசிசி) திருத்தப்பட்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

தற்போது..
ரிசர்வ் வங்கியின் இன்னோவேஷன்  ஹப் (RBIH) ரிசர்வ் வங்கியுடன் இணைந்து கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் வழங்குவதை எண்டு டு எண்டு டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஃபெடரல் வங்கியுடன் இணைந்து இந்த சோதனையானது செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட உள்ளது.

5 நட்சத்திர உணவு அந்தஸ்தைப் பெற்ற உத்தரபிரதேச சிறைச்சாலை..!

கடன் நிதியைப் பெறுவதற்கான செயல்முறைக்கு, வாடிக்கையாளர்கள் நில உரிமைக்கான சான்று மற்றும் பிற ஆவணங்களுடன் நேரில் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். சில நேரங்களில், வாடிக்கையாளர் வங்கிக் கிளைக்கு பலமுறை செல்ல வேண்டியிருக்கிறது. அதை மாற்றி வீட்டில் இருந்தே வங்கி பணிகளை முடிக்கும் முயற்சியாக இந்த திட்டம் அமைக்கப்பட உள்ளது

முன்னோடித் திட்டமானது, வங்கிகளுக்குள் உள்ள பல்வேறு செயல்முறைகளை தன்னியக்கமாக்குவது(automation) மற்றும் சேவை வழங்குநர்களுடன் அவற்றின் அமைப்புகளை ஒருங்கிணைக்கும். மேலும், KCC கடன் வழங்கும் செயல்முறையின் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் அதன் திறனை மேம்படுத்துவதுடன் கடன் வாங்குபவர்களுக்கான செலவுகளைக் குறைக்கும் மற்றும் நேரத்தைக் கணிசமாக குறைக்கும் (TAT) என்று தெரிவிக்கின்றனர்.

சேவை செய்யப்படாத மற்றும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு கடன் ஓட்டத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Credit Card, Digital India, PM Kisan, RBI

அடுத்த செய்தி