பார்வையற்றோருக்கு ரூபாய் மதிப்பை அறிய புது செயலி..! ரிசர்வ் வங்கி வெளியீடு

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய மட்டுமே இணையம் தேவை. பயன்படுத்த இணைய சேவை தேவையில்லை.

பார்வையற்றோருக்கு ரூபாய் மதிப்பை அறிய புது செயலி..! ரிசர்வ் வங்கி வெளியீடு
MANI செயலி
  • News18
  • Last Updated: January 2, 2020, 3:28 PM IST
  • Share this:
பார்வையற்றோருக்கு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்கு உதவ புதிதாக ‘MANI’ என்னும் செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் செயலியை நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகிய தளங்களில் இந்த செயலியை இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எத்தனை ரூபாய் நோட்டு என்பதை மட்டுமே இந்த செயலி வெளிப்படுத்தும்.

கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா? என்பது குறித்தெல்லாம் இந்த செயலி வெளிப்படுத்தாது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார்வைத்திறன் இல்லாதோர், நிறம் அடையாளம் காண முடியாத நிலை உள்ளோருக்கு இந்த செயலி உதவும். இந்த செயலியின் மூலம் பகல், இரவு என எந்த நேரமென்றாலும் ரூபாய் தாளை மடித்து, விரித்து, முழுவதுமாக, பாதியாக என எப்படிக் காட்டினாலும் அது எத்தனை ரூபாய் என்பதை ‘MANI’ செயலி காட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய சூழலில் இந்த செயலியில் ரூபாயின் மதிப்பை சொல்லும் ஆடியோ இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே உள்ளது. பார்வை மற்றும் செவித்திறன் இல்லாதோருக்கு வைப்ரேஷன் மூலம் ரூபாயின் மதிப்பு வெளிப்படுத்தப்படும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய மட்டுமே இணையம் தேவை. பயன்படுத்த இணைய சேவை தேவையில்லை.

மேலும் பார்க்க: தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய்... டிசம்பரில் மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய்!
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்