வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே நீடிக்கும் என, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில் நிதிக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் பணத்திற்கான வட்டியும், மாற்றமின்றி 3. 35 சதவிகிதமாகவே நீடிக்கும் என்றார். கொரோனா பரவல் அதிகரிப்பால் சில மாநிலங்களில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால், உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதே சமயம், நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி ஏற்கனவே நிர்ணயித்தபடி, 10. 5 சதவிகிதமாக தக்கவைக்கப்படும் எனவும் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.