Home /News /business /

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம்

ரெப்போ வட்டி 0.50 சதவீதம் உயர்வு

ரெப்போ வட்டி 0.50 சதவீதம் உயர்வு

ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர்  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

    இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த ரெப்போ வட்டி உயர்வுக்கு ஆதரவாக நிதிக்கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    மேலும் அவர், விலைவாசி உயர்வு சற்று தனியத்தொடங்கினாலும், பொதுமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் நிலையில் தான் உள்ளது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணவீக்க வீகிதமும் 6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் பண வீக்கம் மெல்ல குறையும்.


    அதேபோல் வங்கிகளில் கடன் வளர்ச்சி கடந்தாண்டில் 5.5 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு சர்வதேச சூழல் ஆகியவை காரணமாகத் தான் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் பலமாகத்தான் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமா..? இதை செய்தால் போதும்

    இந்த ரெப்போ ரேட் உயர்வானது வங்கிக்கடன் பெறும் பொது மக்கள் பலரை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை கட்ட, வங்கிகள் அந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது, ரெப்போ வட்டி உயர்ந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும், ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும். தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Inflation, RBI, Repo rate

    அடுத்த செய்தி