Home /News /business /

ரெப்போ ரேட் 4.90% ஆக உயர்வு...வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி உயரும்:சாமானியர்களுக்கான பாதிப்பு என்னென்ன?

ரெப்போ ரேட் 4.90% ஆக உயர்வு...வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி உயரும்:சாமானியர்களுக்கான பாதிப்பு என்னென்ன?

ரெப்போ ரேட் உயர்வு

ரெப்போ ரேட் உயர்வு

தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.

    ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து வீட்டு கடன், வாகன கடன் ஆகியற்றுக்கான மாதாந்திர தவணை தொகை (EMI) உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.


    மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திஸ்கந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட்விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.  ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ ரேட் விகிதம் மேலும் 0.35 சதவீதம் உயர்த்தப்படலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    ரெப்போ ரேட் என்றால் என்ன?

    சாமானிய மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இவர்களுக்கு கடன் தரும் வங்கிகள், தங்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் பணத்தை கடன் பெறும். இவ்வாறு கடன் பெறும் தொகைக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி (Repo rate). பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முக்கிய கருவியாக ரெப்போ ரேட் பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க: ரெப்போ ரேட் மீண்டும் உயர்வு.. கடன்களுக்கான வட்டி உயரும்: பணவீக்கம் 6.7 % ஆக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கணிப்பு
    பாதிப்புகள் என்னென்ன?

    வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை கட்ட, வங்கிகள் அந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது, ரெப்போ வட்டி உயர்ந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும், ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும்.

    தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Home Loan, RBI, Repo rate

    அடுத்த செய்தி