ஹோம் /நியூஸ் /வணிகம் /

நகைக்கடனுக்கு அதிக பணம் பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நகைக்கடனுக்கு அதிக பணம் பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

நகைக்கடன் பெறும் போது, நகையின் மதிப்பில் 90 சதவிதம் வரை கடனாக பெற்று கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா காலத்தில், தற்போது வரை 1.15 சதவிதம் அளவிற்கு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்த நிலையில், பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  குறுகிய கால கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் 4 சதவிதமாகவே தொடர்கிறது. 2020-21ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

  சாமானிய மக்கள் பெறும் தங்க நகை கடனில், தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் 75 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதாகவும், கொரோனாவால் உணவு பொருட்களின் விலை சர்வதேச நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

  வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Gold loan