Home /News /business /

Repo rate: ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கான வட்டி உயரும்

Repo rate: ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கான வட்டி உயரும்

ரெப்போ ரேட் உயர்வு

ரெப்போ ரேட் உயர்வு

RBI increased repo rate: செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி ஸ்கந்த தாஸ், ரெப்போ ரேட் விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் அறிவித்தார். 040 சதவீதம் உயர்வு காரணமாக ரெப்போ ரேட் விகிதம் 4.40 சதவீதமாக நிலைபெற்றுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    ரெப்போ ரேட் விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி ரிசர் வங்கி ஆளுநர் சக்திஸ்கந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்த வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் வரி விகிதம் உயர்வு காரணமாக வங்கிகளிடம் சாமானியர்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும்.

    ரிசர்வ் வங்கி(reserve bank of india) பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் (repo rate) எனப்படுகிறது. இதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி  ரிவர்ஸ் ரெப்போ (reverse repo) எனப்படுகிறது.

    இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி ஸ்கந்த தாஸ், ரெப்போ ரேட் விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் அறிவித்தார். 040 சதவீதம் உயர்வு காரணமாக ரெப்போ ரேட் விகிதம் 4.40 சதவீதமாக நிலைபெற்றுள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடித்து வருவதால் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்து தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், இதனையடுத்து மே 2 முதல் மே 4ம் தேதிவரை திட்டமிடாத கூட்டம் நடைபெற்றதாகவும் இதில் ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: 2021-2022 நிதியாண்டின் 4வது காலாண்டில் நெட்வொர்க் 18 நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு


    ரெப்போ ரேட் விகிதம் உயர்வு காரணமாக, வங்கிகள் சாமானியர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ரெப்போ ரேட் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: RBI, Repo rate, Reserve Bank of India

    அடுத்த செய்தி