வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வட்டி உயர்வால் தனி நபர், வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கள்கிழமை தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதன்படி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 6. 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6 புள்ளி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வை அடுத்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது.
ரெப்போ விகிதம் :
ரெப்போ விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது. மக்களிடம் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் பொருளாதார மந்தநிலையை சரி செய்வதே இதன் நோக்கமாகும்.
ஏற்கனவே நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க உயர் சகிப்புத்தன்மையும் 6 சதவீத உச்ச நிலையை எட்டியுள்ளது. இதற்கு மேல் பண வீக்கம் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும். அது இல்லாமல் இந்த பட்ஜெட் படி ஏப்ரல் தொடங்கி நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் மந்தநிலையை எதிர்பார்க்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற வெளிப்புற காரணிகளால் உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்ந்து பொருளாதார சீர்குலைவை சந்தித்து வருவதால் கடந்த ஆண்டு மே மாதம் முதல், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறுகிய கால கடன் விகிதத்தை 225 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
டிசம்பர் மாத நிதிக் கொள்கை மதிப்பாய்வில், மத்திய வங்கி 50 bps அதிகரிப்புகளை வழங்கிய பிறகு முக்கிய பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை (repo) 35 அடிப்படை புள்ளிகளால் (bps) உயர்த்தியது.
கொரோனா காலத்திற்கு பின்னர் மீண்டு வரும் நாட்டில் பொருளாதாரம், நாட்டில் உள்ள பணவீக்கத்தை செய்ய 2022 ஆம் ஆண்டு மட்டும் ஐந்து முறை மத்திய வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது.அதே போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி தனது முக்கிய ரெப்போ விகிதத்தை 25 bps புள்ளிகள் அதிகரித்து 6.50% ஆக உயர்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.