Home /News /business /

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

டிஜிட்டல் மோசடி வழக்குகளுக்கு மத்தியில் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில முன்னணி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டிஜிட்டல் மோசடி இணையதளங்கள், தொலைப்பேசிகள் மற்றும் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பல்வேறு முறைகளின் தரவுத்தளத்தை உருவாக்க ஒரு குழுவை அமைப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து  வருகிறது. இது எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என்றும், மிகவும் அவசியமான முறை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    மேலும் ரிசர்வ் வங்கி, மத்திய வங்கியின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு பெறுதல் மற்றும் மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடி வருவதாக, ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் அனில் குமார் ஷர்மா சமீபத்திய பேட்டியின் போது தெரிவித்தார். அதன்படி, தவறான ஸ்பேம் நம்பர்கள், தகவல்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

    எனவே இது சார்ந்த மோசடி பதிவேட்டை அமைப்பதற்குக் குறிப்பிடத்தக்கக் காலக்கெடு எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் சர்மா கூறினார். "தற்போது, ​​பணம் செலுத்துதல், செட்டில்மென்ட் மற்றும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை போன்ற பல்வேறு துறைகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். இது பாதுகாப்பு தன்மையையும் மேலும் உறுதிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார். பணம் செலுத்தும் முறையில் நிகழ் நேர மோசடி கண்காணிப்புக்கு இந்த பதிவேட்டில் அணுகல் வழங்கப்படும். குறிப்பாக வளர்ந்து வரும் பாதுகாப்பு சார்ந்த அபாயங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க, மோசடி தொடர்பான தரவுகளை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Also Read : இனி பெங்களூருவில் இருந்து சென்னையின் பிரபல ஹோட்டல்களில் ஆர்டர் செய்து சாப்பிட முடியும் - Zomato சூப்பர் அறிவிப்பு

    மேலும், ஒம்பட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகார்களைச் சுட்டிக்காட்டி, 2021-2022 ஆம் ஆண்டில் 4.18 லட்சம் புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்துக் கொண்டார். இது முந்தைய ஆண்டில் 3.82 லட்சமாக இருந்தது எனவும், கடந்த நிதியாண்டில் 96.5 சதவீத வழக்குகளிலிருந்து 97.9 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். அதே போன்று கடந்த நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான புகார்களில் 39 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, NBFC-கள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகளில் உள்ள சேவை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த நுகர்வோர் குறை தீர்க்கும் முறையைத் தொடங்கினார். மேலும் இந்த செயல்முறையை எளிமையாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பதிலளிக்கக் கூடிய வகையில் ‘ஒரே தேசம் ஒரு குறைதீர்ப்பாரை’ (‘One Nation One Ombudsman’) என்கிற திட்டத்தைத் தொடங்கினார். இது மக்களின் தரவுகளைப் பாதுகாப்பதோடு, வங்கி சார்ந்த செயல்முறையின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையை உண்டாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது போன்ற பல்வேறு திட்டங்களை வரும்காலங்களில் மத்திய அரசு வங்கி சார்ந்து தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Bank fraud, Digital Transaction, Online Frauds, RBI

    அடுத்த செய்தி