ஆகஸ்ட் 1 முதல் மாத சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ கட்டணத்திற்கு புதிய விதி - மாற்றம் செய்த ஆர்பிஐ

பணம் - ஆர்பிஐ

கொரோனா தொற்று பரவலால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த காலத்தில், அரசு மானியங்களை பயனாளிகள் உரிய காலத்தில் பெறுவதற்கு இந்த திட்டம் உதவியாக அமையும்.

 • Share this:
  மாத சம்பளம் (Salary), ஓய்வூதியம் (Pension) மற்றும் இஎம்ஐ (EMI) கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் 2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

  இந்த புதிய நடமுறைபடி, நீங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் காத்திருக்கத் தேவை இல்லை. உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். சம்பள நாள் வார இறுதி நட்களிலும் வருவது வழக்கம். இதனால், தற்போது மாத சம்பளம் பெறுவோர் சம்பளக் கணக்கில் வரவுக்காக திங்கள் கிழமை வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

  இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்தி காந்தா தாஸ் (Shaktikanta Das), கடந்த ஜூன் மாத கடன் கொள்கை மறுஆய்வின் போது, வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கும், 24x7 ரியல் டைம் மொத்த தீர்வின் (RTGS), நன்மைகளைப் பெறுவதற்கும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் இயக்கத்தில் உள்ள தேசிய தானியங்கி தீர்வு (NACH), இனி வாரம் முழுவதும் இயக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த மாற்றம் 2021 ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  என்.ஏ.சி.எச். (NACH) இந்திய கொடுப்பனவு கூட்டு அமைப்பால் (NPCI) இயக்கப்படும் கட்டண செலுத்தும் முறைமையாகும். இது ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. மேலும், மின்சார கட்டணம், கேஸ் சிலிண்டர் கட்டணம் (Gas Cylinder Bill), தொலைபேசி கட்டணம், நீர் கட்டணம், கடன் இ.எம்.ஐ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் வசதியும் வழங்குகிறது. இதில் தற்போது, திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். ஆனால் இனி காத்திருக்க வேண்டியது இல்லை. இந்த அனைத்து வசதிகளையும் இனி வார இறுதி நாட்களிலும் மேற்கொள்ளவும், பெறவும் முடியும்.

  Must Read : டெல்லி சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் - சசிகலா ஆடியோ முக்கிய காரணமா?

  இந்த என்.ஏ.சி.எச், பயனாளிகளுக்கான நேரடி மற்றும் பயனுள்ள டிஜிட்டல் பயன்முறையின் பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் முறையாக உருவெடுத்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது, கொரோனா தொற்று பரவலால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த காலத்தில், அரசு மானியங்களை பயனாளிகள் உரிய காலத்தில் பெறுவதற்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Suresh V
  First published: