முகப்பு /செய்தி /வணிகம் / சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு..!

சரிவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

10 வருட அரசு பத்திர திட்டங்கள் மீதான வருவாயும் 7.64 சதவீதத்தில் இருந்து 7.59 சதவீதமாகச் சரிந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காலை முதல் சரிந்து இருந்த ரூபாய் மதிப்பு 50 பைசா உயர்ந்து 71.88 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 50 பைசா சரிந்து 71.32 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. உர்ஜித் படேல் நேற்று மாலை ராஜினாமாவை அறிவித்ததை அடுத்துச் செவ்வாய்க்கிழமை ரூபாய் மதிப்பு 72.60 ரூபாயாகச் சரிந்துள்ளது.

10 வருட பத்திர திட்டங்கள் மீதான வருவாயும் 7.64 சதவீதத்தில் இருந்து 7.59 சதவீதமாகச் சரிந்துள்ளது.

முதலீட்டாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில் பாஜக ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் என மூன்று மாநிலங்களையும் இழக்கும் அபாயம் உள்ளது.

இன்று பங்கு சந்தை வர்த்தகத்தைத் தொடங்கியது முதல் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

காலை 10:35 மணி நிலவரத்தின் படி சென்செக்ஸ் 342.73 புள்ளிகள் என 0.99 சதவீதம் சரிந்து 34,611.72 புள்ளியாகவும், நிப்டி 96.55 புள்ளிகள் என 0.92 சதவீதம் சரிந்து 10,392.15 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: டிவி நிகழ்ச்சியில் பாஜக - சமாஜ்வாதி இடையே கைகலப்பு!

First published:

Tags: Indian Rupee, RBI, Rupee