இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ், நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் முற்றிலும் ஊகங்களின் அடிப்படையிலானது மற்றும் சூதாட்டத்தைப் போன்றது என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கூறினார்.
பிசினஸ் டுடே வங்கி மற்றும் பொருளாதார உச்சிமாநாட்டின் அமர்வில் ரிசர்வ் வங்கியின் கவர்னர், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பல வெளிப்புற காரணிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலையிலிருந்து இந்திய பொருளாதாரத்தை கடினமான காலங்களில் வழிநடத்துவதில் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து பேசினார்.
கோவிட்-19 காலத்திலும் அதற்குப் பிறகும் ரிசர்வ் வங்கி எவ்வாறு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையும், பணவீக்கம் மற்றும் பிறகவலைக்குரிய பொருளாதார சிக்கல்களை கண்காணிக்கும் அதே வேளையில் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார்.
அதன் இடையே கிரிப்டோகரன்சி குறித்தும் அவர் பேசினார். முன்னர் பிளாக்செயின் தொழில்நுட்பம் அதன் பல்வேறு பயன்பாடுகளின் காரணமாக ஆதரிக்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி கவர்னர் கூறியிருந்தாலும், இந்த உச்சிமாநாட்டில் பேசிய தாஸ், "கிரிப்டோவில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது - இது தடை செய்யப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
மேலும் கிரிப்டோகரன்சி குறித்து பேசும் போது, கிரிப்டோகரன்சிக்கு எந்த அடிப்படை மதிப்பும் இல்லை. சிலர் கிரிப்டோகரன்சியை ஒரு சொத்து என்று அழைக்கிறார்கள், சிலர் அதை நிதி தயாரிப்பு என்று அழைக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு சொத்து அல்லது நிதி தயாரிப்புக்கும் அடிப்படை மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிக்கு எந்த அடிப்படை மதிப்பும் இல்லை.
கிரிப்டோகரன்சிகளின் சந்தை விலை நிலையற்றது. கிரிப்டோகரன்சி சந்தையில் யாருடைய மதிப்பீட்டை முழுவதுமாக நம்புவது என்பது 100 சதவீத ஊகங்களைத் தவிர வேறில்லை. வெளிப்படையாகச் சொன்னால் அது சூதாட்டம் போன்றது. சூதாட்டத்தை தடை செய்யும் நம் நாட்டில் சூதாட்டத்தை போன்ற கிரிப்டோகரன்சியையும் சூதாட்டமாகக் கருதி தடை செய்ய வேண்டும். இல்லையேல் அதற்கென்று தனி விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மேலும் ரிசர்வ் வங்கி, மத்திய வங்கியாக நாட்டின் பணவியல் ஆணையமாக இருந்து வருகிறது. கிரிப்டோகரன்சி தலைதூக்கினால், பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை அது இழக்கும் என்று சுட்டிக்காட்டினார். அது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தின் டாலர்மயமாக்கலுக்கு வழிவகுக்கும்" என்று தாஸ் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cryptocurrency, RBI, Reserve Bank of India