• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு: ரிசர்வ் வங்கி 

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு: ரிசர்வ் வங்கி 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறித்த ஆய்வு கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 2-வது வாரத்தில் 8, 600 கோடி ரூபாய் அதிகரித்து, சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு கண்டிருப்பதாகவும் ரிசர்வு வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல் தங்கத்தின் கையிருப்பும், சுமார் 1000 கோடி அதிகரித்து ஒன்று புள்ளி 46 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இதற்கு காரணம்  ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட சில அதிரடி நடவடிக்கைகளால்தான் தற்போது இது உயர்வு கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது முந்தைய வாரத்தில் 399.282 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: