Home /News /business /

RTGS பரிவர்த்தனை செய்வதற்கான நேரம் நீட்டிப்பு!

RTGS பரிவர்த்தனை செய்வதற்கான நேரம் நீட்டிப்பு!

ஆர்டிஜிஎஸ்

ஆர்டிஜிஎஸ்

ரூ.2 லட்சத்திற்கான அதிகமான மதிப்புடைய பரிவர்த்தனைகளைச் செய்ய RTGS சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
    RTGS பரிவர்த்தனை செய்வதற்கான நேரத்தை ஜூன் 1 முதல் நீட்டிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    இணையதள வங்கி சேவைகளில் அதிக பணம் பரிவர்த்தனை செய்வதற்காக வழங்கப்படும் சேவை RTGS(Real Time Gross Settlement System). ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக பரிவர்த்தனை செய்ய RTGS சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த RTGS பரிவர்த்தனை செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இனி காலை 8 மணி முதல் 6:00 மணி வரையிலும் அதிக பணம் பரிவர்த்தனை செய்யமுடியும்.

    முன்னதாக RTGS பரிவர்த்தனை காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரையில் மட்டுமே செய்யமுடியும்.

    ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலை 8 மணி முதல் 11 மணி வரை செய்யும் RTGS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் RTGS பரிவர்த்தனைகளுக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை செய்யும் RTGS பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை, 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் RTGS பரிவர்த்தனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: RBI, RTGS Transaction

    அடுத்த செய்தி