Home /News /business /

புதிய வாடிக்கையாளர்களை இனி இணைக்க கூடாது.. பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

புதிய வாடிக்கையாளர்களை இனி இணைக்க கூடாது.. பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

பேடிஎம்

பேடிஎம்

Paytm | பேடிஎம் நிறுவனத்தின் தொடக்ககால ஷேர்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்த போதிலும், தற்போது அந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திறன் குறித்து முதலீட்டாளர்கள் சந்தேகம் கொண்டிருந்த நிலையில், பேடிஎம் நிறுவனம் அடுத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தளத்தில், தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் ஸ்மால்-ஃபைனான்ஸ்-பேங்க் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்த பேடிஎம் நிறுவனத்திற்கு இந்த தடை உத்தரவு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பேடிஎம் நிறுவனத்தின் தொடக்ககால ஷேர்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்த போதிலும், தற்போது அந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திறன் குறித்து முதலீட்டாளர்கள் சந்தேகம் கொண்டிருந்த நிலையில், பேடிஎம் நிறுவனம் அடுத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தளத்தில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பது என்பது ஐடி ஆடிட்டர்களுடைய ஆய்வறிக்கையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்த நிறுவனத்தின் கட்டமைப்புகள் தொடர்பாக ஏற்பட்ட கவலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ரிசர்வ் வங்கியின் உத்தரவு காரணமாக ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்று பேடிஎம் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதுகுறித்து, பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவுகளால் ஏற்கனவே உள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளிக்கிறோம்.



ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கலை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பேடிஎம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது’’ என்று தெரிவித்தார். சந்தையில் ஏற்கனவே மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிச் சேவையாளர்களான மாஸ்டர் கார்டு, டைனர்ஸ் கிளப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி போன்றவற்றின் பட்டியலில் தற்போது பேடிஎம் நிறுவனமும் இணைந்துள்ளது. அந்த நிறுவனங்கள் அனைத்தும் அமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கான ரிசர்வ் வங்கியால் அபராதம் விதிக்கப்பட்டவை ஆகும்.

Also Read : மாதம் ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் ரீதியான பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், பரிவர்த்தனைகள் தோல்வி அடைய கூடாது என்பதையும், அவை மிகுந்த பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்யும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

Also Read : ஃபீச்சர் ஃபோன்களுக்கான யூபிஐ சேவைகள் அறிமுகம்

ஆடிட் அமைக்க உத்தரவு

பேடிஎம் நிறுவனத்தில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த நிறுவனத்தின் சார்பில் ஐடி ஆடிட் நிறுவனம் ஒன்றை நியமிக்க வேண்டும் என்று ரிசர் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிம் பேங்கிங் சேவைகளில் கேஒய்சி தொடர்பான புகார்கள் மற்றும் ஒழுங்குமுறை பிரச்சினைகள் நிலவுவதாக கூறப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: Paytm, Reserve Bank of India

அடுத்த செய்தி