Home /News /business /

கடன் கேட்டு இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை அழைக்கக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

கடன் கேட்டு இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை அழைக்கக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ரிசர்வ வங்கி,

ரிசர்வ வங்கி,

நியாயமான நடைமுறைகள் வரையறையின் (FPC) ஒரு பகுதியாக RBI அவ்வப்போது வங்கி நடைமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் கடனை வசூலிக்கும் முயற்சிகளில் இரவு நேரங்களில் அழைக்கக்கூடாது என்று ஏற்கனவே விதித்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அன்று கடன் மீட்பு முகவர்கள் கடன் வாங்கியவர்களுக்கு, காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பிறகும் கடன் கேட்டு அழைக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதிய வழிகாட்டு உத்தரவுகளை வெளியிட்டது. அறிவுறுத்தல்களை வழங்கும்போது, ​​கடன் மீட்பு முகவர்கள் மத்திய வங்கியின் கடன்களை வசூலிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களில் இருந்து விலகிச் செயல்படுவதைக் கண்டித்தது.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது அவர்களது முகவர்கள் தங்கள் கடனை வசூலிக்கும் முயற்சிகளில் எந்தவொரு நபருக்கும் எதிராக வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எந்தவிதமான மிரட்டல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எந்தவொரு வடிவத்திலும் கடன் பெற்றவர்களுக்கு தகாத செய்திகளை அனுப்பக் கூடாது. அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற அழைப்புகள் செய்யக் கூடாது. மேலும் கடனாளியை காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்குப் பிறகும் தொலைபேசி மூலம் அழைக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

லோன் ஆப்களுக்கான புதிய வழிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நியாயமான நடைமுறைகள் வரையறையின் (FPC) ஒரு பகுதியாக RBI அவ்வப்போது வங்கி நடைமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் கடனை வசூலிக்கும் முயற்சிகளில் இரவு நேரங்களில் அழைக்கக்கூடாது என்று ஏற்கனவே விதித்திருந்தது. ஆனாலும் கடன் வசூலிக்கும் முகவர்கள் தொடர்ந்து அதைச் செய்வதாலும், தகாத முறைகளில் பேசுவதாகவும் எழுந்த புகாரின் பேரில் தான் தற்போது மீண்டும் இந்த கட்டுப்பாடு நெறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடனாளிகளை தொலைபேசியில் அழைப்பதன் மூலம் காலாவதியான கடன்களை திரும்பப் பெறுவதற்கான நேரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த வழிமுறைகள் அனைத்து வணிக வங்கிகளுக்கும் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட), கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ARCs) மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bank Loan, RBI, Reserve Bank of India

அடுத்த செய்தி