புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி..?

2,000 ரூபாய் தாளை நிறுத்திவிட்டு 1,000 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாகவும் செய்திகள் வெளியாகின.

புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி..?
போலி ரூபாய் தாள்
  • News18
  • Last Updated: October 18, 2019, 3:04 PM IST
  • Share this:
ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூபாய் தாள் ஒன்றை வெளியிடுவதாகப் புகைப்படத்துடன் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

1,000 ரூபாய் தாளின் புகைப்படங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் வைரலாகி வருகிறது. 2,000 ரூபாய் தாளை நிறுத்திவிட்டு 1,000 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இச்செய்தியில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் கசியும் இந்த ரூபாய் நோட்டு புகைப்படத்தை உற்று கவனைத்தால் அதில் artistic imagination எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவெறும் கற்பனை ரூபாய் தாள் என்பது தெளிவாகிறது. ஆயிரம் ரூபாய் குறித்த செய்தியும் போலியானதே. இதுபோன்ற செய்தி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரவி வருகிறது. இதை மக்கள் நம்பவேண்டாம் என்றே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பார்க்க: ரெட்மி நோட் சீரிஸ் போன் விற்பனை 100 மில்லியனைத் தொட்டது- உற்சாகத்தில் ஜியோமி

நெஸ்லே பால் பவுடர் ஆபத்து... எச்சரிக்கும் ரிப்போர்ட்...!
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading