Home /News /business /

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: சாமானியர்களுக்கு என்னென்ன பயன்?

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: சாமானியர்களுக்கு என்னென்ன பயன்?

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆர்பிஐ நாணய கொள்கைக் கூட்டம் (Monetary Policy Meet) ஏப்ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று இன்று அறிவிப்பு வெளியானது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே இங்கு ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அது ஏன் சாமானிய மக்களுக்கு முக்கியம் என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக அறிவித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது ஆர்பிஐ வங்கிகளிடமிருந்து பெறும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம்.

    வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வணிக வங்கிகள் வீட்டு கடன், வாகன கடன் மீதான ஈஎம்ஐ குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததால் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம்.

    அடுத்த நாணய கொள்கைக் கூட்டம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அப்போதும் ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறையும் என்று கூறப்படுகிறது.

    ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் பங்குச்சந்தையில் பெரிய பாதிப்பு ஏதுமில்லை.

    மேலும் பார்க்க:





    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Monetory Policy, RBI, Repo rate

    அடுத்த செய்தி