Home /News /business /

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அனுமதியில்லை... அதிரடி முடிவெடுத்த ஆர்பிஐ.!

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அனுமதியில்லை... அதிரடி முடிவெடுத்த ஆர்பிஐ.!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

Reserve Bank of India | இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்போது வங்கி சாரா நிதி நிறுவனங்களை (என்பிஎஃப்சி) கிரெடிட் கார்டுகளை வழங்க அனுமதிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடந்த மாதம் இந்திய குடிமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கடன் ஆப்-கள் பலவும் சீன நிறுவனங்களைச் சேர்ந்தது என்பதும், அந்நிறுவனம் திட்டமிட்டு மக்களிடம் அதிக வட்டி மற்றும் கட்டணங்களை மோசமான முறையில் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உஷாரான மத்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் நிதி சார்ந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் கூட ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கடன் ஆப்-கள் தொடர்பான ஒயிட் லிஸ்ட் வெளியிடப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு சேவையை வழங்க அனுமதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (Non Banking Finance Company - NBFC) கிரெடிட் கார்டுகளை வழங்க அனுமதிக்கப்போவதில்லை என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. தற்போது, ​​வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள வங்கிகளின் வாயிலாக கடன் அட்டைகளை விநியோகித்து வருகின்றன.

ஜூலை 2004ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் “இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி வங்கி சாராத நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு விநியோகத்தை மேற்கொள்ள அனுமதி கிடையாது. இருப்பினும், டெபிட் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகள், மதிப்பு கூட்டப்பட்ட கார்டுகள் போன்றவற்றை வழங்க அனுமதி கோரி வங்கி சாராத நிதி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன” என தெரிவித்திருந்தது.



என்பிஎஃப்சிகளிடமிருந்து வந்த கோரிக்கைகளை தடுத்து நிறுத்தும் விதமாகவும், கிரெடிட் கார்டு விநியோகம் தொடர்பாக தீயாய் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் ஏப்ரல் 21ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறையில், “ஆர்பிஐ ஒப்புதல் இல்லாமல், என்பிஎஃப்சிகள் டெபிட், கிரெடிட் கார்டு போன்றவற்றை வழங்காது” என அறிவித்தது.

Also Read : Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?

ப்ரோக்கரேஜ் நிறுவனமான ஜெஃப்ரீஸ் (Jefferies), “ உள்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு திட்டம் மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் மேலும் தனது சந்தையை விரிவுபடுத்த முடியும் என எடுத்துரைந்தது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத கடன் வழங்குபவராக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் விளங்குகிறது. 3,500 கிளைகளில், 1,40,000 க்கும் மேற்பட்ட வணிகர்களுடனான தொடர்புடன் கிட்டத்தட்ட 60 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.



பஜாஜ் ஃபைனான்ஸ் தனது வாடிக்கையாளர்கள் மூலமாக 20-40 சதவீத விற்பனையை கூட அடைய முடிந்தால், மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.900 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை லாபம் ஈட்ட முடியும் என்பதையும் இந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.

Also Read : கிரெடிட் கார்டு வாங்க ஆசைப்படுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!

ஜூன் மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டுகளை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸுடன் (UPI) இணைக்க அனுமதித்தது, இது பிரபலமான தளத்தைப் பயன்படுத்தி அதிகமான மக்கள் பணம் செலுத்த உதவும். இதுவரை, சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட டெபிட் கார்டுகள் மட்டுமே UPI இயங்குதளத்துடன் இணைக்க அனுமதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Banks, Credit Card, Reserve Bank of India

அடுத்த செய்தி