₹ 2 முதல் ₹ 17 வரை... ATM-ல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்

கோப்பு படம்

ATM களில் பணம் எடுக்க கட்டணம் விதிப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி அமைத்த குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஏடிஎம் மையங்களில், மற்ற வங்கி ஏடிஎம் அட்டைகளை கொண்டு பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஏடிஎம் மையங்களில், மற்ற வங்கி ஏடிஎம் அட்டையை பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்து ஆண்டு குழு ஒன்றை அமைத்தது.

  இந்த அறிக்கையை தற்போது ரிசர்வ் வங்கியிடம் அந்த குழு வழங்கியுள்ளது. அதில், மற்ற வங்கி ஏடிஎம் அட்டைகளை கொண்டு, அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கூடுதலாக பணம் எடுக்க, கட்டணம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
  படிக்கஉடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

  படிக்கபேருந்தில் பயணித்த கணவன் - மனைவிக்கு கொரோனா... பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் பாதி வழியில் இறங்கியதால் பதற்றம்
  இந்த கூடுதல் கட்டணம், ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும், 2 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கட்டணம் விவகாரம் குறித்த பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி இன்னும் ஏற்று கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  ஒருவேளை இந்த பரிந்துரை ஏற்றுகொள்ளப்படும் நிலையில், ஏடிஎம்மில் பிற கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்பது கூறிப்பிடத்தக்கது.
  Published by:Sankar
  First published: