• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு..!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு..!

லக்ஷிமி விலாஸ் வங்கி

லக்ஷிமி விலாஸ் வங்கி

Lakshmi Villas Bank | வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது.

  • Share this:
    லட்சுமி விலாஸ் வங்கியில் ஒரு மாதத்துக்கு 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கக்கூடாது என்று ஆர்.பி.ஐ கட்டுப்பாடு விதித்துள்ளது.

    சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும், 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது.

    லட்சுமி விலாஸ் வங்கியில் நஷ்டம் அதிகரித்து வருவதால் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வங்கியின் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.

    வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது. இவ்வங்கியின் நிலையான வைப்புத் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது.

    இதன் அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: