முகப்பு /செய்தி /வணிகம் / வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை... RBI-ன் பாரத் பில் பேமென்ட் முறை அறிமுகம்!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை... RBI-ன் பாரத் பில் பேமென்ட் முறை அறிமுகம்!

பாரத் பில் பேமென்ட்

பாரத் பில் பேமென்ட்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், கரண்ட் பில், வாட்டர் பில் உள்ளிட்ட பிற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தபடியே செலுத்தலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் வெளிநாட்டு இந்தியர்கள் (என்ஆர்ஐ) எல்லை தாண்டிய இன்பவுண்ட் பணம் செலுத்துவதை அறிமுகபடுத்தியுள்ளது.

BBPS என்றால் என்ன?

பிபிபிஎஸ் என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டண முறை மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) இயக்கப்படுகிறது.

இந்த அமைப்பில் 20,000 பில்லர்கள் உள்ளனர்.  ஒவ்வொரு மாதமும் 8 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. முன்னதாக, BBPS மூலம் பணம் செலுத்துவது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய சட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு அரசாங்கக் குழு பரிந்துரை

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.க்கள்) இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், கரண்ட் பில், வாட்டர் பில் உள்ளிட்ட பிற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தபடியே செலுத்துவதற்கு வசதியாக, BBPS-ஐ எல்லை தாண்டிய உள்நோக்கிய கொடுப்பனவுகளை ஏற்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.

இதுதொடர்பான வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த அறிக்கையில், "பிபிபிஎஸ் பிளாட்ஃபார்மில் உள்ள எந்தவொரு பில்லர்களின் பில்களையும் ஒன்றுக்கொன்று இயங்கக்கூடிய முறையில் செலுத்துவதற்கு இது பயனளிக்கும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு பணம் அனுப்புவதற்கான வழியை இது எளிதாக்கும் என்பதால், நிபுணர்கள் இதை ஒரு நேர்மறையான வழியாகக் கருதுகின்றனர்.

லடாக் சுற்றுலா செல்ல ஆசையா..! IRCTC-ன் அசத்தலான ஆஃப்ர் மற்றும் பயண விவரங்கள்

BBPS மூலம், வாடிக்கையாளர்கள் மின்சாரம், தொலைத்தொடர்பு, DTH, எரிவாயு மற்றும் தண்ணீர் போன்ற பல்வேறு பயன்பாட்டு பில்களை செலுத்தலாம். அதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் பிரீமியங்கள், காப்பீட்டு பிரீமியங்கள், பள்ளி மற்றும் நிறுவனக் கட்டணம், கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஃபாஸ்டாக் ரீசார்ஜ்கள், உள்ளூர் வரிகள் மற்றும் ஹவுசிங் சொசைட்டி பாக்கிகள் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில் கட்டலாம்.

வியாழன் அன்று ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் , இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) கட்டண போர்ட்டலான BBPS ஐப் பயன்படுத்தி NRIகள் இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது.

NPCI என்பது RBI மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மூலம் நாட்டில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகளை எளிதாக்கும் முயற்சியாகும்.

First published:

Tags: Bill payment issue, NRI, RBI