Home /News /business /

கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்.. கருத்து கேட்கும் ரிசர்வ் வங்கி

கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்.. கருத்து கேட்கும் ரிசர்வ் வங்கி

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்பு

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்பு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடைய பங்குதாரர்கள் வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, யுபிஐ சேவை வசதி 2016ம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. அதன்படி, யுபிஐ மூலம் கூகுள்-பே மற்றும் போன்-பே வாயிலாக கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

    இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு யுபிஐ பரிவர்தனைக்கும் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பங்குதாரர்கள் கருத்துகள் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் இயல்பாக செய்யக்கூடிய நடவடிக்கையாக உள்ளது. எளிய டீக் கடை தொடங்கி தங்க நகை வாங்குவது வரை அனைத்து பண பரிவர்த்தணைகளையும் ஆன்லைன் டிஜிட்டல் பேமன்ட் வசதிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம், பிம் யூபிஐ போன்ற பல்வேறு வழிகளில் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தற்போது ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பு கூறுகையில், 'பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது. மின்னணு நிதி பரிமாற்றத்திற்கான உள்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்கும் நோக்கில் கட்டணம் விதிக்கப்பட உள்ளது எனவும், இதுதொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்' என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அன்று ஐடி ஊழியர்..இன்று 199க்கு அளவில்லா பீட்ஸா விற்கும் முதலாளி.. கலக்கும் பஞ்சாபி சர்தார்..

    பணமதிப்பு இழப்பிற்கு பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Digital Transaction, RBI

    அடுத்த செய்தி