கிரிப்டோகரன்சி தொடர்பாக மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. கிரிப்டோகரன்சியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வாதிடும் நிலையில், முழுமையாக தடை செய்யாமல் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தரப்பு விரும்புகிறது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 1980களின் தொடக்கத்தில் கிரிப்டோகரன்சி என்னும் மெய்நிகர் நாணயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக சென்றது. அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் (Bitcoin) மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல். புதிதுபுதிதாக கிரிப்டோகரன்சிகள் வரத் தொடங்கிய அதேவேளையில், அதனை வாங்குவதில் பொதுமக்கள் காட்டும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் கிரிப்டோகரன்சி அங்கீகரிக்கப்பட்ட நாணயம் அல்ல.
கிரிப்டோகரன்சியை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும், இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் (Dark web) போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்வகையில் கிரிப்டோகரன்சி உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
இத்தகைய சூழலில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் நிலைப்பாடு வெவ்வேறாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: கேள்விக்கேட்ட முதலமைச்சருக்கு அதிர்ச்சி பதில் கொடுத்த ஆசிரியர்கள்!
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், டிஜிட்டல் டோக்கனைப் பற்றிய மத்திய வங்கியின் கவலைகள் மற்றும் நாணயமாக அங்கீகரிக்கப்படாத போதிலும் இந்தியாவில் அதன் மீது மோகம் அதிகரித்து வருவது குறித்து வலியுறுத்தினார். மறுபுறம், மோடி அரசாங்கமும் அதன் துறைகளும் கிரிப்டோகரன்சியை முழுவதுமாக தடை செய்வதற்குப் பதிலாக பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதைத் தவிர்ப்பதற்காக அதன் மீது வலுவான ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை விதிப்பது தொடர்பாக வலியுறுத்தின.
"கிரிப்டோ கரன்சி வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது, இதனை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கும். அரசாங்கத்தால் இந்த துறையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முற்போக்கானதாகவும், முன்னோக்கிப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது,” என்று நவம்பர் 13 சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து முக்கிய நபர் தெரிவித்ததாக பிடிஐ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க: போஸ்ட் ஆபீஸை தவிர வேறு எங்கும் இப்படி கிடைக்காது.. அதிக வட்டி.. அதிக வருமானம்!
Bitcoin விலைகள் திடீரென ஏற்றம் அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பிரபலமடைந்ததில் இருந்து கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக RBI தனது வலுவான கருத்துக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன என்பது மத்திய வங்கியின் வாதம்.
மேலும், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் உரிமைகோரப்பட்ட சந்தை மதிப்பு ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கி சந்தேகித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்புக்கு அச்சுறுத்தல்
கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி அச்சப்படுகிறது. ரூபாய் சார்ந்த சேமிப்பு கணக்கு, பி.எஃப். போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக கிரிப்டோகரன்சியில் அதிக நபர்கள் முதலீடு செய்யத் தொடங்கினால் ரூபாயின் மதிப்பு குறையக் கூடும். இது வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிக்கும் வங்கியின் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், நாட்டில் கிரிப்டோகரன்சிகள் கட்டுப்பாடற்றதாக இருப்பதால், அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், அரசாங்கமும் அந்தத் தொகைக்கு வரி விதிக்க முடியாது. அதற்கு மேல், கிரிப்டோகரன்சிகள் பணமோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம். கிரிப்டோ நாணயங்கள் இயற்கையில் நிலையற்றதாக இருப்பதால், ஹேக்கிங், மோசடிகள் மற்றும் இழப்புகளுக்கு அதன் முதலீட்டாளர்கள் ஆளாகக் கூடும் என்பதும் ரிசர்வ் வங்கியின் வாதம்.
2018 ஆம் ஆண்டில், வங்கிகள் கிரிப்டோகரன்சிகளில் ஒப்பந்தங்களைச் செய்ய முடியாது என்று ஆர்பிஐ அறிவித்தது, இது இந்தியாவில் கிரிப்டோ துறையின் வளர்ச்சியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியது. இருப்பினும், மார்ச் 2020 தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யும் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5, 2021 இல், ரிசர்வ் வங்கிக்கான டிஜிட்டல் நாணயத்தின் மாதிரியை பரிந்துரைக்க மத்திய வங்கி ஒரு உள் குழுவை நிறுவியது. இதன் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உங்களுக்கு ஒரு சொந்த வீடு இல்லையா? கவலைய விடுங்க அரசு தரும் வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க!
இதெல்லாம் ஒருபுறம் இருக்க கிரிப்ரோகரன்சிகள் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்களால் கிரிப்டோகரன்சியில் 6 ட்ரில்லியன் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், முதலிட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தெளிவான குறிப்புகள் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cryptocurrency, India, RBI