• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கடந்த 15 வருடங்களாக இல்லாத வகையில் குறைந்த ஹோம் லோன் வட்டி விகிதங்கள்

கடந்த 15 வருடங்களாக இல்லாத வகையில் குறைந்த ஹோம் லோன் வட்டி விகிதங்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்துள்ளன. 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஹோம் லோன் என்பது ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கியில் இருந்து வீடு வாங்குவதற்கு கடன் வாங்கும் தொகை என்று பொருள். ஹோம் லோன்கள் சரிசெய்யக்கூடிய அல்லது நிலையான வட்டி வீதம் மற்றும் கட்டண விதிமுறைகளைக் கொண்டுள்ளன. கடனை திருப்பிச் செலுத்தும் வரை சொத்து ஒரு கடனாக வங்கிக்கோ, நிதி நிறுவனத்துக்கோ அடமானம் வைக்கப்படுகிறது. இப்போது இதில் ஏற்பட்டுள்ள சில ஆபர்களை காண்போம்.

    நடைபெற்று கொண்டிருக்கும் பண்டிகை காலங்களில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா போன்ற நாட்டின் மிகப் பெரிய வங்கிகளால் ஹோம் லோன்களுக்கான (Home loans) வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வீடு வாங்குபவர்களுக்கு செயலாக்கக் கட்டணத்தில் (Processing fees) தள்ளுபடிகள் போன்ற கூடுதல் நன்மைகளும் உள்ளன. வீடு வாங்கும் பெண்களுக்கு சிறப்பு நன்மைகள் உள்ளன என்று Mint தெரிவித்துள்ளது. ANAROCK Property Consultantsன் துணைத் தலைவரான சந்தோஷ்குமாரின் கூற்றுப்படி,  ஹோம் லோன் வட்டி விகிதங்கள் கடந்த 15 ஆண்டுகளை காட்டிலும் மிகக் குறைவு என்கிறார்.

    வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் :

    • பாங்க் ஆப் பரோடா


    ஹோம் லோன்களுக்கான ரெப்போ-இணைக்கும் கடன் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளி குறைப்பை பாங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்துள்ளது. 6.85 சதவீத வட்டி விகிதம் வங்கி வழங்கும் ஹோம் லோன்களுக்கு இது பொருந்தும்.

    • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா


    ரூ. 30 லட்சம் வரை கடனுக்கு 6.09 சதவீதம் வட்டி உள்ளது. 30 லட்சத்துக்கு மேல் உள்ள ஹோம் லோன் தொகையில் 7 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். CIBIL ஸ்கோரின் அடிப்படையில் ரூ. 75 லட்சத்துக்கு மேல் ஹோம் லோனில் கடன் பெறுபவர்களுக்கு 25 bps வட்டி சலுகை வழங்கப்படுகிறது.

    • யூனியன் பாங்க் ஆப் இந்தியா


    இந்த வங்கியில் 7 சதவீதத்திலிருந்து வட்டி விகிதம் தொடங்குகிறது. 30 லட்சத்திற்கு மேல் உள்ள ஹோம் லோன்களுக்காக, வங்கி தனது வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. ஹோம் லோன் பெரும் பெண்களுக்கு ஒரு சிறப்பு ஏற்பாடும் உள்ளது. அவர்கள் வட்டி விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளின் கூடுதல் சலுகையைப் பெறுவார்கள். மேலும் Mint அறிக்கையின்படி, டிசம்பர் 31 வரை செயலாக்க கட்டணம் இருக்காது.

    Also read... Gold Rate |  தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன?



     

    • கோடக் மஹிந்திரா வங்கி


    இந்த வங்கியில்  ஹோம் லோன் ஆண்டுக்கு 6.9 சதவீதமாகத் தொடங்குகின்றன. வேறொரு வங்கியின் கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன் கணக்கை கோடக் மஹிந்திரா வங்கிக்கு மாற்றினால், மீதமுள்ள தொகையை மாற்றுவதற்காக

    ரூ. 20 லட்சம் வரை சேமிக்க முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு கட்டணங்களை இந்த வங்கி அளிக்கிறது.

    ஆக்சிஸ் வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி போன்ற பிற வங்கிகளும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 6.9 சதவீதத்திலிருந்து தொடங்குகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: