சேலத்தில் அறிமுகமான பைக் டாக்ஸி பற்றி தெரியுமா?

ராபிடோ (Rapido) என்ற பைக் டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்? எங்கு செல்ல வேண்டுமென பதிவிட்டால்... அடுத்த சில நிமிடங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுனருடன் வந்து நிற்கும்.

Tamilarasu J | news18
Updated: February 8, 2019, 6:26 PM IST
சேலத்தில் அறிமுகமான பைக் டாக்ஸி பற்றி தெரியுமா?
சேலத்தில் பைக் டாக்ஸி!
Tamilarasu J | news18
Updated: February 8, 2019, 6:26 PM IST
கால் டாக்சியை போல சேலத்தில் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

கார்களில் பயணம் செய்யும் மக்கள், வழிநெடுக போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு வேகமாக செல்ல வேண்டுமென நினைக்கும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் இடையூறாய் உள்ளது. இந்த பிரச்னைக்கு வழிகண்டு, அதனை வருமானம் ஈட்டும் சேவையாக மாற்றியுள்ளது ராபிடோ நிறுவனம்.

ராபிடோ (Rapido) என்ற பைக் டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்? எங்கு செல்ல வேண்டுமென பதிவிட்டால்... அடுத்த சில நிமிடங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுனருடன் வந்து நிற்கும்.

குறைந்தபட்ச கட்டணம் மூன்று கிலோ மீட்டருக்கு 15 ரூபாய். அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் குறைவு, எளிதாகவும், வேகமாகவும் பயணிக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் இந்த சேவை பிரபலமடைந்து வருகிறது.

இருசக்கர வாகனம் இருந்தால் வேலையும், ஊதியமும் உறுதி என்பதால், முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் இந்த வேலையை பார்க்க இளைஞர்கள் விரும்புகின்றனர்.

முற்றிலும் சாலை பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு தங்கள் ஓட்டுனர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதாக கூறும் ராபிடோ நிறுவனத்தின் மேலாளர், இளைஞர்களுக்கு மாதம் 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

சென்னை , பெங்களூர், மைசூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராபிடோ சேவை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இந்த சேவை சேலத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 2019-20 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி...
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...