Home /News /business /

Raksha Bandhan 2022 | ரக்‌ஷா பந்தனில் உங்களது சகோதரிக்கு வழங்க இந்த கிப்ட் தான் சிறந்தது - அது என்ன தெரியுமா.?

Raksha Bandhan 2022 | ரக்‌ஷா பந்தனில் உங்களது சகோதரிக்கு வழங்க இந்த கிப்ட் தான் சிறந்தது - அது என்ன தெரியுமா.?

ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன்

Raksha Bandhan Gift | ரக்‌ஷா பந்தன் விழாவில் தூய அன்போடு கையில் ராக்கி கட்டும் சகோதரிகளுக்கு மகிழ்ச்சியோடு பாதுகாப்பை வழங்கும் விதமாக தங்கத்தில் பரிசுகளை வழங்கலாம். நிச்சயம் இப்பரிசு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சகோதரன் மற்றும் சகோதரிகளுக்கு இடையே நிலவும் பாசத்தைப் பறைசாற்றும் பண்டிகை தான் ரக்‌ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பௌர்ணமியன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் தங்களது சகோதரர்களின் கையில் மஞ்சள் கயிறை அதாவது ராக்கியைக் கட்டி சகோதரிகள் மகிழ்வார்கள். இப்படி தங்களது கையில் ராக்கி கட்டும் சகோதரிகளை மகிழ்வாக வைத்துக்கொள்வேன் என்றும் வாழ்நாள் முழுவதும் எந்த காலக்கட்டத்திலும் உனக்கு துணை நிற்பேன் என்று உறுதியேற்பார்கள் சகோதரர்கள்.

இதோடு ராக்கி கட்டும் சகோதரர்கள் தங்களுக்கு என்ன பரிசு வழங்கவுள்ளார்கள் என ஆவலுடன் காத்திருப்பார்கள் சகோதரிகள். பெண்களுக்குப் பிடித்த மற்றும் டிரெண்டியான ஸ்மார்ட் வாட்ச், விதவிதமான நெக்லஸ், தோடுகள், வளையல்கள், புத்தாடைகள், அழகு சாதனப்பொருள்கள், மொபைல், ஹெட்போன்ஸ் போன்றவற்றில் என்ன வாங்கலாம்? எது வாங்கிக்கொடுத்தால் சகோதரியின் முகத்தில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் காணலாம் என சகோதரர்கள் யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் உங்களது சகோதரிக்கு மகிழ்ச்சியோடு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை அளிக்கும் தங்கத்திலான பொருள்களில் ஏன் நீங்கள் கிப்ட் கொடுக்கக்கூடாது. ஆம் எப்போதும் விலைப்போகும் சொத்து மதிப்பில் தங்கமும் ஒன்று. எனவே தூய அன்போடு உங்களது கையில் மஞ்சள் கயிறைக் கட்டிய உங்களது சகோதரிக்கு தங்கப்பத்திரம், தங்கக்காசு, தங்கத்திலான ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுக்க முயலுங்கள். வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருப்பேன் என்று உறுதியளித்ததற்கு ஏற்றால் போல் இப்பரிசு உங்களுக்கு அமையும்.தங்கம் வாங்குவதால் என்னென்ன நன்மைகள்:

நம்மிடம் சிறிதளவு தங்கம் இருந்தாலும் நிச்சயம் அனைவரும் பாதுகாப்பானதாக உணர்வோம். எப்போது வேண்டுமானாலும் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொடும்.குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தங்கத்தின் விலை மற்றும் அதன் மதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை பல ஏற்ற மற்றும் இறக்கங்களுடன் காணப்பட்டாலும் தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், தங்கத்தின் விலைகள் அமெரிக்கப் பத்திர வருவாயில் காணப்படும் கூல்-ஆஃப் மூலம் 2.8% ஒற்றைப்படை அளவுகளில் இருந்தது. ஆனால் 2022 ஜூன் நடுப்பகுதியில், ஆக்கிரமிப்பு விகித உயர்வுகளின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இது 3.48% வரை சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே பாதுகாப்பான சொத்தாக தங்கம் பார்க்கப்படுகிறது.

Also Read : சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பக்தன் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா..?

இந்தியாவில் தங்கம் வாங்கும் போக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது. தற்போது தங்கத்தின் மீதான அதிக இறக்குமதி வரி மற்றும் திருமண சீசன் முடிவடைவதால் சென்ற மாதம் தங்கத்தின் விலை குறைவாக இருந்தது. இருப்பினும், உள்நாட்டு தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக ஜூலை மூன்றாவது வாரத்தில் சில்லறை விற்பனை நல்ல முன்னேற்றத்தைக் கண்டது.

Also Read : உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

எந்த சூழலிலும் தங்கம் வாங்குவது என்பது வீணாகப் போய்விடாது. எனவே ரக்சா பந்தன் பண்டிகைக்கு உங்களது சகோதரிகளுக்கு உங்களால் முடிந்தால் தங்கப்பத்திரமாகவே, தங்க காசு, தங்க நகைகள் போன்றவற்றை வாங்கிக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Gold, Raksha Bandhan, Surprise gift

அடுத்த செய்தி