நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற மற்றும் சிக்கனமான பொது போக்குவரத்தாக இருப்பதால், நம்மில் பெரும்பாலானோர் வெளியூர் அல்லது வெளி மாநிலங்கள் செல்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறோம். ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது பயணிகளுக்கு இந்திய ரயில்வே பயண காப்பீட்டையும் வழங்குகிறது. ஆனால் ரயில் பயணத்தின் போது கிடைக்கும் ட்ராவல் இன்ஷூரன்ஸ் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
இதற்கு முக்கிய 2 காரணங்கள் நாம் ஒரு மீடியேட்டர் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்கிறோம். அவர் இந்த காப்பீடு பற்றி நமக்கு சொல்வதில்லை. இரண்டாவதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது விவரங்களை நிரப்புவதில் உள்ள சிரமம் காரணமாக இன்ஷூரன்ஸ் ஆப்ஷனை பலரும் புறக்கணிக்கிறோம். ஆனால் IRCTC தனது பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை இன்ஷுரன்ஸ் கிளெய்ம் செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? IRCTC வெப்சைட்டில் டிக்கெட் புக் செய்யும் போது, குறிப்பிட்ட வெப் பேஜில் உள்ள 'Travel Insurance' ஆப்ஷனை பயன்படுத்துவதன் மூலம் இந்த பலனைப் பெறலாம். இந்த ஆப்ஷன் மூலம் IRCTC பயணிகளுக்கு ரூ.1-க்கும் குறைவான செலவில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.
Read More : புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!
இந்த இன்ஷூரன்ஸ் ரயில் பயணத்தின்போது ஏற்படும் விபத்தின் காரணமாக நிகழும் எந்த விதமான சேதத்தையும் ஈடுசெய்யும் வகையில் உள்ளது. டிக்கெட் புக் செய்யும்போது Travel Insurance-ஐ கிளிக் செய்து சில விவரங்களை நிரப்ப வேண்டும். இதன் பிறகு நீங்கள் IRCTC-யின் ட்ராவல் இன்ஷூரன்ஸின் காப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்படுவீர்கள்.
இந்த எளிய நடவடிக்கை மூலம் ரயில்களில் பயணிக்கும்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக ஒரு பயணி இன்ஷுரன்ஸ் கிளெய்ம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Insurance, Train ticket