வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு - ரகுராம் ராஜன் எச்சரிக்கை

வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு - ரகுராம் ராஜன் எச்சரிக்கை
ரகுராம் ராஜன்
  • News18
  • Last Updated: July 15, 2020, 8:41 PM IST
  • Share this:
பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன்சில் மாநாட்டில் பேசிய ரகுராம் ராஜன், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு நடவடிக்கையால் ஏராளமான தொழில்நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும் இதனால் யாரும் எதிர்பாராத அளவில் வாராக்கடன் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்.

ஜன்தன் வங்கிக் கணக்கின் மூலம், குறிப்பிட்ட நபர்களுக்கு உதவிகள் சென்று சேருவதில்லை என்று குறிப்பிட்ட ராஜன், இத்திட்டத்தை விளம்பரப்படுத்தும் அளவுக்கு செயல்படுத்துவதில்லை என விமர்சித்தார்.

படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு


வேளாண் துறையை சீரமைக்க அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களை சரியாக நடைமுறைப்படுத்தினால் அத்துறை சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.

 
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading