Bajaj Auto | பஜாஜ் ஆட்டோ தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் பஜாஜ் ராஜினாமா!

ராகுல் பஜாஜ்

கடந்த 2020ம் ஆண்டு தலைவராக இருந்த போது தனது நிர்வாக பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ராகுல் பஜாஜ் நிர்வாகம் இல்லாத பதவியில் தன்னை நிறுத்திக் கொண்டார்.

  • Share this:
பஜாஜ் ஆட்டோவின் தலைவர் மற்றும் நிர்வாகமற்ற இயக்குநர் பதவியில் இருந்து ராகுல் பஜாஜ் விலகியுள்ளார், மே 1 முதல் எமரிட்டஸ் தலைவராக அவரை ஐந்து வருட காலத்திற்கு நியமிக்க பஜாஜ் ஆட்டோ ஊதியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியாவின் பிரபலமான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான ராகுல் பஜாஜ் இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபராக விளங்குகிறார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவராக 33 ஆண்டுகாலம் பதவியில் இருந்த ராகுல் பஜாஜிற்கு வயது தற்போது 82 ஆகிறது. அவருடைய வயதை கருத்தில் கொண்டு பஜாஜ் ஆட்டோவின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் முடிவெடுத்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதனை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திலும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஆட்டோவின் அங்கமாக திகழ்ந்த ராகுல் பஜாஜிற்கு பதிலாக பஜாஜ் ஆட்டோவின் புதிய தலைவராக அவருடைய மகன் நீரஜ் பஜாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீரஜ் பஜாஜ் மே 1ம் தேதி பஜாஜ் ஆட்டோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

ராகுல் பஜாஜ் ஓய்வு குறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பெரும் வெற்றிக்கு ராகுல் பஜாஜ் பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மகத்தான அனுபவத்தையும் நிறுவனத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, அவரது அனுபவம், அறிவு மற்றும் ஞானத்திலிருந்து அவ்வப்போது ஒரு ஆலோசனைப் பாத்திரத்திலும், வழிகாட்டியாகவும் தொடர்ந்து பயனடைவதைக் கருத்தில் கொண்டு, இன்று நடைபெற்ற நிறுவன கூட்டத்தில் இயக்குநர்கள் குழு மற்றும் பரிந்துரைக்கப்பட்டபடி 2021 மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில் ராகுல் பஜாஜை நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவராக ஐந்து வருட காலத்திற்கு நியமிக்க ஊதியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் நீங்க பெரும் கோடிஸ்வரராக ஆகலாம்! எப்படினு கேக்குறீங்களா?

கடந்த 2020ம் ஆண்டு தலைவராக இருந்த போது தனது நிர்வாக பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ராகுல் பஜாஜ் நிர்வாகம் இல்லாத பதவியில் தன்னை நிறுத்திக் கொண்டார். இந்த வார தொடக்கத்தில் அந்த பதவியில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.
போலி ரெம்டெசிவிர் தொழிற்சாலை நடத்திய கும்பல் சுற்றிவளைப்பு: ஒரு போலி ஊசி ரூ.25,000க்கு விற்பனை செய்தது அம்பலம்!!

இதனிடையே பஜாஜ் ஆட்டோவின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் நீரஜ் பஜாஜ், அந்நிறுவனத்தில் 35 ஆண்டுகாலம் பணியில் இருந்துள்ள அனுபவம் கொண்டவர். இளநிலை படிப்பை மும்பையில், மேற்கல்வியை அமெரிக்காவிலும் பயின்றவர்,

Bajaj Auto, Bajaj Allianz Life and General Insurance Co நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் இருந்து வரும் நீரஜ் பஜாஜ், பஜாஜ் குழும நிறுவனங்கள் சிலவற்றின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
Published by:Arun
First published: