Home /News /business /

விவசாயக் கடன் தள்ளுபடி பொருளாதாரத்தை பாதிக்கும் : ரகுராம் ராஜன்

விவசாயக் கடன் தள்ளுபடி பொருளாதாரத்தை பாதிக்கும் : ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜன்.

இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் அதிகம் உள்ள நிலையிலும் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை, விவசாயத் துறையும் நசுங்கி வருகிறது.

  • News18
  • Last Updated :
    பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு தேவையான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை, நிதி பற்றக்குறையில் இயங்கி வருகிறது எனறு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற சிக்காகோ பல்கலைக்கழகத் தலைமையிலான கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேவையான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. நிதி பற்றாக்குறையில் இயங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் நிதி நிலையைச் சீர் செய்ய ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் அதிகம் உள்ள நிலையிலும் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை, விவசாயத் துறையும் நசுங்கி வருகிறது என்றார்.

    ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோற்றதால் வரும் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கூடிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அரசு தரப்பில் இருந்து வந்துள்ள தகவல் கூறுகிறது.

    அது குறித்து கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், விவசாயக் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடன் தள்ளுபடியால் இந்திய பொருளாதாரம் பாதிப்படையும் என்பதையும் அரசு நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வரும் கச்சா எண்ணெய்யை குறைக்க அதற்கான சிறந்த கொள்கைகளை அரசு கொண்டு வர வேண்டும். நம்மைப் போன்ற கச்சா எண்ணெய்க்காகப் பிறரை நம்பியுள்ள நாடுகளுக்கு அதைச் சமாளிக்க சிறந்த நுட்பங்கள் நிறைய இருக்கின்றன என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.

    மேலும் பார்க்க: பா. ரஞ்சித்தின் அரசியல்
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Raghuram Rajan

    அடுத்த செய்தி