கொரோனா வைரஸால் வீழ்ந்த இந்திய பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு போதாது என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், கொரோனாவால் மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிதித்துறைக்கு மறுகட்டமைப்பு, மறுமூலதனம் தேவை என குறிப்பிட்டுள்ள அவர், அதில் உள்ள மிகப்பெரிய துளையை அடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், அது மட்டுமே பொருளாதாரத்தை மீட்பதற்கு பயன்படாது என அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் மட்டும் கொடுத்தால் போதாது எனக் குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவர்களுக்கு காய்கறிகள், சமையல் எண்ணெய், தங்குமிடம் மட்டுமின்றி போதிய பணமும் தேவை என தெரிவித்துள்ளார்.
சிறு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட கடன்கள், அவற்றை பொருளாதார ரீதியாக மேலும் பலவீனப்படுத்தும் என்றும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரத்தின் முக்கிய அங்கங்களாக உள்ள பெரிய நிறுவனங்கள், வங்கிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருளாதார நிலை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, கார் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்திய விமான நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பிரதமர் அலுவலகம் கேட்க வேண்டுமென ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், பிரதமர் அலுவலகத்தால் மட்டும் அதனை கையாள முடியாது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.