பாங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கி கவர்னர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை: ரகுராம் ராஜன்

நாட்டின் அரசியல் சூழலை நன்கு புரிந்துள்ளவர்கள், அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.

news18
Updated: July 20, 2019, 8:23 PM IST
பாங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கி கவர்னர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை: ரகுராம் ராஜன்
ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த காலத்திலிருந்து நெருக்கிப் பிடித்து வந்த ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து நடுநிலையாக்கியுள்ளனர்.
news18
Updated: July 20, 2019, 8:23 PM IST
இந்தியாவின் ஆர்.பி.ஐயின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அடுத்ததாக பாங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.

அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து பி.பி.சிக்கு பேட்டியளித்துள்ள ரகுராம் ராஜன், “பாங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. மத்திய வங்கிகளில் தற்போது மிகப் பெரிய அரசியல் உள்ளது.

எனவே நாட்டின் அரசியல் சூழலை நன்கு புரிந்துள்ளவர்கள், அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.


கண்டிப்பாக நான் வெளிநாட்டைச் சார்ந்தவன். எனவே நான் அந்த பதவிக்காக விண்ணப்பிக்கவில்லை” என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் தற்போது சிக்காகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

Loading...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...