Home /News /business /

அலுவலகங்களில் ஹைபிரிட் முறையே அதிக அளவில் எதிர்பார்க்கும் இந்திய ஊழியர்கள் - ஆய்வில் தகவல்

அலுவலகங்களில் ஹைபிரிட் முறையே அதிக அளவில் எதிர்பார்க்கும் இந்திய ஊழியர்கள் - ஆய்வில் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த கணக்கெடுப்பில் இந்தியாவிலிருந்து சுமார் 2,608 ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 93% பேர் முழுநேர பணியாளர்கள் ஆவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சமீபத்திய ஆய்வு ஒன்றில், இந்திய ஊழியர்களில் 30%-க்கும் அதிகமானோர் தங்கள் வேலைகளை மாற்ற விரும்புவது தெரிய வந்துள்ளது. அதே நேரம் சுமார் 71% பேர் தங்களது தொழில் வாழ்க்கை முன்னேற்றம் புறக்கணிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களது வாழ்க்கைப் பாதைகளை வரையறுக்க மிகவும் வெளிப்படையான செயல்முறைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது சுட்டிக் காட்டுகிறது.

    இந்த ஆய்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள PwC இந்தியா அறிக்கை, உலகளவில் எடுக்கப்பட்ட 19% என்ற ஆய்வு முடிவுடன் ஒப்பிடும் போது, புதிய வேலை அல்லது நிறுவனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பதாக இந்தியர்கள் நம்புகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தியத் தொழிலாளர்களின் நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் கணக்கெடுப்பு 2022 (India Workforce Hopes and Fears Survey 2022) என்ற பெயரில் நடந்த இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 32% பேர் தாங்கள் தற்போது வேலை பார்த்து வரும் நிறுவனங்களை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி இருக்கிறார்கள்.

    Also Read :ஐ.டி. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொன்ன சூப்பர் அறிவிப்பு

    PwC-ன் உலகளாவிய தொழிலாளர் நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் கணக்கெடுப்பு 2022 முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவிலிருந்து சுமார் 2,608 ஊழியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 93% பேர் முழுநேர பணியாளர்கள் ஆவர். இந்த கணக்கெடுப்பின்படி ஹைபிரிட் வேலைக்கான மாற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 81% ஊழியர்கள் தங்கள் வேலைகளை நேரடியாக அலுவலகம் வராமலே செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். தற்போது தொலைதூரத்திலிருந்து வேலை செய்யக் கூடியவர்களில் 31% பேர் ஏற்கனவே ஹைபிரிட் முறையிலும் வேலை செய்வதாகக் கூறுகிறது கணக்கெடுப்பு.

    சோஷியல் மீடியாக்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் இல்லாத காலத்தில் பிறந்த ஊழியர்கள் அடுத்த 12 மாதங்களில் தங்கள் வேலைகளை மாற்ற அதிகம் வாய்ப்புள்ளதைக் கணக்கெடுப்பு காட்டும் அதே நேரத்தில், தொழில்நுட்பங்கள் அறிமுகமான பிறகு உலகில் பிறந்த ஊழியர்கள் வேளைகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தி உள்ளது. திறன் பற்றாக்குறையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    ஏனென்றால் 67% பேர் தங்கள் வேலைக்குச் சிறப்புப் பயிற்சி தேவை என்று நம்புகிறார்கள், 54% பணியாளர்கள் தங்கள் திறன் தொகுப்புகளில் இந்தியா பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

    Also Read : FIXED DEPOSIT : இந்த வங்கியில் 500 நாட்கள் டெபாசிட் செய்தாலே அதிக வட்டி!

    மேலும் இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் போட்டி போட்டு பணிபுரியும் திறன் அல்லது தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாதது குறித்து கவலை கொண்டுள்ளனர்.

    இந்த இடைவெளி கீழ்மட்டத்தில் மட்டும் இல்லை மேல் மட்ட அதிகாரிகளுக்கும் உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான CEO-க்கள் அடுத்தடுத்து தொழில்நுட்ப திறன்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளின் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளார்கள். இதைத் தவிர வேலை செய்யும் இடத்தில் பேசப்படும் தலைப்புகளில் சமூகம் மற்றும் அரசியல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், 75 சதவீத ஊழியர்கள் இவற்றைப் பற்றி விவாதித்துக் கொள்வதால், இத்தகைய உரையாடல்களுக்குப் பாதுகாப்பான இடங்களை நிறுவனங்கள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Analysis Report, Jobs, Survey

    அடுத்த செய்தி