Home /News /business /

அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!

அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!

பஞ்சாப் வங்கி

பஞ்சாப் வங்கி

PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட இந்த கடனை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    பர்சனல் லோன் கடன்களை பலரும் நாடி செல்வது அவசர காரணத்திற்காக தான். பெரும்பாலும் இந்த தனி நபர் கடன்களுக்கான வட்டி வருமானம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்பதால், பர்சனல் லோன் எடுப்பது முழுக்க முழுக்க விருப்பம் மற்றும் தேவையை பொறுத்தது. அதே சமயம் சில நேரங்களில் வங்கிகள் பண்டிகைகால ஆஃபராக, ஹியர் எண்ட் ஆஃபரக சில சமயங்களில் பர்சன் லோனில் சில சிறப்பான சலுகைகள், தள்ளுபடிகளை அறிவிக்கும். அப்போது கிடைக்கும் வாய்ப்பை கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க்  உடனடி கடன் வசதியில் ஒரு சூப்பரான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதிலும் வீடு கட்ட திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்கள், நிலம் வாங்க நினைப்பவர்கள், கார் வாங்க பிளான் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு என்னவென்றால் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் திட்டத்தை வங்கி அறிவித்துள்ளது.

    இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட்டாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தகுதி மதிப்பீட்டுக்கு பிறகு ஒரு சில நிமிடங்களில் இந்த லோன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் இந்த உடனடி கடன் திட்டத்துக்கு வாடிக்கையாளர்களிடம் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் இந்த http://instaloans.pnbindia.in/ லிங்கினுள் சென்று விவரங்களை பார்க்கலாம்.  இந்த உடனடி கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.

    இதையும் படிங்க. இனி வட்டி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும்… சூப்பர் நியூஸ் சொன்ன பேங்க் ஆஃப் பரோடா வங்கி!

    PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட இந்த கடனை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது வாடிக்கையாளர்கள் PNB One மூலமாக இந்த கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



    விண்ணப்பிப்பது எப்படி?

    1. https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! இந்த இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்.

    2. அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும்.

    இதையும் படிங்க.. Fixed Deposit திட்டத்தை இந்த வங்கிகளில் தொடங்கினால் இப்படியொரு சலுகையா?

    3. தொடர்ந்து அதில் கேட்கப்படும் சில விவரங்களை பூர்த்தி செய்ய பின்பு உங்களின் விண்ணப்பம் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, கடன் வழங்கப்படும்.

    இது முழுக்க முழுக்க உடனடி கடன் வசதி என்பதால் ஆன்லைனிலே எல்லா கடனை பெற்றுக் கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Punjab National Bank, Savings

    அடுத்த செய்தி