ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய செக் புக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கூடாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய இரண்டு வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொள்ளுங்கள். ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உடன் இணைக்கப்பட்டது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இதனால் தான் இந்த புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளின் பழைய செக் புக் நிறுத்தப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய செக் புக்கை பஞ்சாப் நேஷனல் வங்கியின் செக் புக் உடன் புதுப்பிக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 1 முதல் பழைய செக் புக்கை வைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்காது. பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ செக் புக்கை புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் செக் புக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட செக் புக்கை அக்டோபர் 1 க்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வங்கி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செக் புக் பெற, பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் -க்குச் சென்று செக் புக் கோரிக்கையை வைக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அழைப்பு மையங்களின் உதவியுடனும் செக் புக்குக்கு விண்ணப்பிக்கலாம். இதை தவிர்த்து 1800-180-2222 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுக்குறித்து முழு விவரங்களை அறியலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Punjab National Bank